மாஸ்டர் நான் தான் இருக்கேன்ல..! கட்டிக்கங்க..! விவாகரத்தான நடன நடிகரிடம் கெஞ்சும் மதுரை நடிகை!

பிரபல நடிகர் மற்றும் நடன இயக்குனரான ஒருவருக்கு அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இளம் நடிகை ரூட் விட்டுவிடுவதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.


இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனர் நடன இயக்குனர் என பல கேரக்டர்களை அசால்டாக செய்து கொடுப்பதில் வல்லவர் என்று கூறலாம். இதற்கு உதாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒருவரை மிகத் தீவிரமாக காதலித்து வந்தார். அந்த நடிகையும் இவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் இருவரும் தங்கள் காதலை பிரேக்கப் செய்து கொண்டனர்.

சில காலம் காதல் தோல்வியால் விரக்தி அடைந்த அந்த நடிகை சினிமா துறையை விட்டே விலகி விடலாம் என்றும் முழுக்குப் போட்டுவிட்டு விட்டார். சில ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மிகப் பிரமாண்டமாக மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார் அந்த நடிகை. தற்போது அவர் வேறு ஒருவரை மிக சின்சியராக காதலித்து அவருடன் ஒன்றாக இணைந்து வலம் வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.


இதேவேளையில் பிரபல நடிகர் மற்றும் நடன இயக்குனரான அவருக்கு வேறு ஒரு இளம் நடிகை ரூட்டு விட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நடிகருக்கு தற்போது இரண்டு நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்களாம் .அதில் ஒருவர் நம்ம ஊரு சினிமாவில் நடித்து பிரபலமாகி வரும் இளம் நடிகை என்று கூறப்படுகிறது. அவர் பொதுவாகவே அப்பாவி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அந்த அப்பாவி நடிகையும் இந்த நடிகரும் ஒன்றாக இணைந்து திரைப்படத்தில் நடித்துள்ளனர். அப்போதுதான் இவர்கள் இருவருக்குமிடையில் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது மேலும் அந்த நடிகை நடிகரை தீவிரமாக காதலித்து வருவதாகவும் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தாலும் அந்த நடிகரை பார்க்காமல் நடிகையால் இருக்க முடியவில்லை என்று கூறப் படுகிறது.

ஆகையால் வாரத்திற்கு ஒரு முறையாவது அந்த நடிகரை வந்து இவர் சந்தித்துவிட்டு செல்கிறாராம் . எப்படியாவது அந்த நடிகரை தன் வலையில் விழ வைக்க வேண்டுமென்பதில் அந்த அப்பாவி நடிகை தீவிர முயற்சியில் இறங்கி உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.