24 வயது நடிகருக்கு தம்பி பாப்பாவை பரிசாக கொடுத்த 53 வயது டிவி நடிகர் தந்தை..! எல்லாம் சுபம்!

பாலிவுட் திரையுலகில் பிரபல டிவி நடிகராக வலம் வரும் ராஜேஷ் கட்டர், தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் இணைந்து தனக்கு 11 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.


பாலிவுட் திரையுலகில் பிரபல டிவி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராஜேஷ் கட்டர் ( வயது 53). இவர் 24 வயதாகும் பிரபல நடிகர் இஷான் கட்டர் அவர்களின் தந்தை ஆவார். இவர் ராஜேஷின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ஆவார். இவர் பிரபல டிவி நடிகை வந்தனா சஜ்னானியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ராஜேஷ் மற்றும் வந்தனா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்று சுமார் பதினோரு ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து பல மாதங்களாகியும் அதனை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தாமல் வைத்திருந்த இந்த தம்பதியினர், தங்களுடைய பன்னிரண்டாம் ஆண்டு திருமண நாளை சிறப்பிக்கும் விதமாக தங்களுடைய அழகிய குழந்தையின் முகத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். 

புகைப்படத்தை பதிவிட்ட நொடியில் இருந்து நடிகர் ராஜேஷுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அதாவது ராஜேஷும் வந்தனாவும் தங்கள் 12 வது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு தங்கள் குழந்தை மகன் வான்ராஜின் முகத்தை பதிவிட்டு இருந்தனர். இந்த பதிவோடு நடிகர் ராஜேஷ் கேப்ஷன் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் அனைவருக்கும் வணக்கம். உலகம் முயற்சிக்கும் காலங்களை கடந்து செல்கிறது. ஆனால் இதுவும் கடந்து போகும். எங்களுடைய குழந்தைகளே இந்த உலகை முன்பைவிட அழகாக மாற்ற போகிறீர்கள். இதனை நாங்கள் நம்புகிறோம். இவ்வாறாக அந்த பதிவில் நடிகர் ராஜேஷ் கட்டர் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் ராஜேஷ் முன்னதாக நடிகை நீலிமா சிங் என்பவரை கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 2001 ஆம் ஆண்டு வரை ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதியினருக்கு பிறந்தவர் தான் நடிகர் இஷான் கட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் ராஜேஷ் கட்டர் தன் குழந்தை மற்றும் இரண்டாவது மனைவியுடன் வெளியிட்டுள்ள புதிய பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.