தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி மரணம்..! - கண்டுகொள்ளாத அரசியல் தலைவர்கள்

பெருந்துறை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே. நல்லப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமானது அரசியல் வட்டாரத்தில் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் டி.கே.நல்லப்பன். இவருடைய வயது 87 1980-ஆம் ஆண்டு முதல் 1984-ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தார். 1986ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை யூனியன் சேர்மனாக பதவி வகித்தார். 1996-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை கருமாண்டி செல்லிபாளையம் என்னும் பேரூராட்சியின் தலைவராக பணியாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றிய இவர் வயது மூப்பின் காரணமாக பல்வேறு வியாதிகளால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பு காரணமாக இவருடைய உடலின் பொறுப்புகள் மருத்துவத்திற்கு ஈடு கொடுக்கவில்லை.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி நல்லப்பன் உயிரிழந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமன்றி தமிழ்நாடு அரசியலுக்கும் இவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாததாக அமைந்துள்ளது. பெரிய கட்சித் தலைவர்கள் யாரும் இவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவமானது பெருந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.