யாரும் இல்லாத லிப்டுக்குள் அந்த ஆணுடன் இருக்க வேண்டும்! முன்னணி நடிகையின் விபரீத ஆசை!

பிரபல மோலிவுட் நடிகை லிப்டில் தனியாக ஆண் நடிகர் ஒருவருடன் இருக்க விரும்புவதாக பேட்டி அளித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மோலிவுட் திரையுலகில் ஜொலித்து வரும் பிரபலங்களில் முக்கியமானவர் பார்வதி திருவோத்து‌. கடந்த 15 வருடங்களாக இவர் நடித்த திரைப்படங்களுள் சில மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. குறிப்பிடும் வகையில் மரியான், உத்தம வில்லன், காட் ஆஃப் சிட்டி, உயரே ஆகிய திரைப்படங்கள் இவருடைய நடிப்பு திறமைக்கு சான்றாக விளங்குகின்றன.

சமீபத்தில் இவர் ஒரு புகைப்படப்பிடிப்பு நிறுவனத்திடம் பேட்டியளித்தார். தொகுப்பாளர் லிப்டில் தனியாக எந்த நடிகருடன் இருக்க விரும்புவீர்கள் என்று கேட்டதற்கு, பார்வதி ஆஸ்திரேலிய நாட்டின் புகழ்பெற்ற நடிகரான கேட் பிளேன்செட்டை தேர்ந்தெடுத்தார். ஆனால் சில வினாடிகளிலேயே அவர் தன் பதிலை மாற்றி, நெட்ப்ளிக்ஸில் வெளியாகின்ற "ஆர்ஃபன் பிளாக்" எனும் தொடரின் கதாநாயகனான தத்தியானா மஸ்லாணியை தேர்வு செய்தார்.

மேலும் கூறுகையில், தனக்கு குளிக்கவும் பல் தேய்க்கவும் சோம்பேறித்தனம் என்று கூறினார். வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது தன்னுடைய நண்பர்களுக்கு 20 நிமிடங்களுக்கு மேலாக ரெக்கார்ட் செய்து மெசேஜ் அனுப்புவது பிடிக்கும் என்றும், அவ்வாறு செய்வது தன்னை தனிமையிலிருந்து விடுபட வைக்கின்றது என்றும் கூறினார்.

இவர் அளித்த பேட்டியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.