தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஐந்து நாட்கள் கழித்து பிரபல மலையாள நடிகரான விநாயகன் தானாகவே சென்று கல்பேட்டா காவல் நிலையத்தில் சரணடைந்த போது கைது செய்யப்பட்டார்.
உன் அம்மாவை படுக்கைக்கு அனுப்புறியா? மலையாள சமூக சேவகியிடம் வரம்பு மீறிய தமிழ் நடிகர்! பிறகு நேர்ந்த பரிதாபம்!
பிரபல மலையாள நடிகரான விநாயகம் என்பவர் மீது சமூக நல விரும்பியான மிருதுளா என்ற பெண் தன்னை ஆபாசமாக அவமதித்தாக கூறி ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதனை பல்வேறு நெட்டிசன்கள் மறுத்து வந்தனர். இதற்கிடையே 15-ஆம் தேதியன்று விநாயகன் மீது மிருதுளா கல்பெட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் 5 நாட்கள் கழித்து விநாயகன் அந்த காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். தன் வாக்குமூலத்தை அங்கிருந்த காவல்துறையினரிடம் அவர் தெரிவித்தார். அதனை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
விநாயகன் தன்னுடைய வக்கீலுடன் காவல் நிலையத்திற்கு சென்றிருந்தார். தன் வாக்குமூலத்தில், "ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு எனக்கு விநாயகத்திடம் இருந்து அழைப்பு வந்தது. எனக்கு நேரமின்மையால் அதனை நான் நிராகரித்தேன். மீண்டும் மீண்டும் அந்த நபர் என்னை தொந்தரவு செய்ததால் பிரச்சனைகள் உண்டாகின.
ஒரு கட்டத்தில் மிகவும் ஆபாசமாக வினாயகன் பேசினார். என்னை படுக்கைக்கு அழைத்தார். என்னை மட்டும் அல்ல எனது தாயாரையும் படுக்கைக்கு அனுப்ப முடியுமா என்று கொச்சையாக பேசினார். பின்னர் அவருக்கு பதிலாக பெண் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவரும் என்னை வற்புறுத்தினார்.
எவ்வளவு பொறுமையாக கூறிய பின்பும், அவர் செவிசாய்க்கவில்லை, அப்போது நான் கறாராகப் பேசினேன்" என்று கூறியுள்ளார். காவல்துறையினர் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் தற்போது ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்த சம்பவத்தின்போது குற்றம் சாட்டிய மிருதுளாவும் காவல் நிலையத்திற்கு வந்தார். இருவருக்கும் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடலை காவல்துறையினரிடம் அவர் சமர்ப்பிக்க வந்தார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.