பிரபல நடிகையின் முதல் கணவர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகை ஜெயபாரதியின் கணவரான மலையாள நடிகர் சந்தார் மறைந்த செய்தியானது மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மலையாளத்திரையுலகில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜெயபாரதி. இவருடைய கணவர் ஹீரோ,வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருந்த மலையாள நடிகரான சந்தார் ஆவார்.

1970-களில் மலையாள திரையுலகில் கால்பதித்து 2015-ஆம் ஆண்டு வரை செம்மையாக நடித்து கொண்டிருந்தவர். இவர் 1975 ஆம் ஆண்டில் எம் கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் வெளியான "பார்யாயே அவஸ்யமுண்டு சமர்ப்பணம்" என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ் மொழியிலும் "மயில்", "சௌந்தர்யமே வருக" ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் ’காட் ஃபார் சேல்’,’காஞ்சி’, நம்பர் 66 மதுரா பஸ் ஆகிய திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுத்தன.

இவர் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை ஜெயபாரதியை திருமணம் செய்தார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் இருவரும் பிரிந்தனர். இத்தம்பதியினருக்கு கிரஸ்.கே.சந்தார் என்ற மகனும் உள்ளார். அவரும் மலையாள திரையுலகில் நடித்து வருகிறார்.

உடல்நலக்குறைவினால் கடந்த 4 ஆண்டுகளாக அவர் நடிப்பதை நிறுத்தியிருந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென்று அவர் காலமானார். அவருடைய வயது 67. கல்லீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார்.

இந்த செய்தியானது மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.