அவன் தான் என் வாழ்க்கையின் முழுமை! புதிய காதலன் குறித்து அமலா பால் ஹாட் அப்டேட்!

பிரபல கோலிவுட் நடிகை தன்னுடைய காதலனை பற்றி பட புரமோஷன் விழாவில் பேசியிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கோலிவுட் திரையுலகில் வெற்றி நட்சத்திரமாக திகழும் கதாநாயகிகளில் அமலாபாலும் ஒருவர். இவர் தமிழில் "சிந்து சமவெளி" என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி 1&2,  மைனா ஆகிய படங்களில் தன்னுடைய திறம்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில் இவர் இறுதியாக "ஆடை" என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்தப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லரானது பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. சிலர் அமலாபால் துணிச்சலுடன் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டினர். வேறு சிலர் அமலாபால் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை படத்தின் மூலம் குழிதோண்டி புதைத்து விட்டதாக சாடினார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் பிரமோஷன் விழாவில் அவர் தன்னுடைய காதலனை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், "என்னுடைய படங்களை நான் என் காதலரிடம் கலந்தாலோசித்த பிறகே தேர்வு செய்கிறேன். அவருடைய ஊக்கம் என்னை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. ஆடை படத்தின் வெளியோட்டத்தை அவரிடம் கூறியபோது, "நீ இதற்கு மனதளவில் நிறைய வளர்ச்சி அடைய வேண்டும். வளர்ச்சி அடைந்த பிறகு நிச்சயமாக இந்த படம் என் சினிமா வாழ்க்கையில் ஒரு சிகரமாக அமையும்" என்றார். சில காரணங்களுக்காக என் காதலரை பற்றிய அடையாளத்தை என்னால் தற்போது வெளியிட இயலவில்லை. நான் சினிமாவில் சிறிதளவு உயர்ந்ததற்கு காரணம் அவருடைய ஊக்கம் தான். தன்னுடைய வாழ்க்கையை மெழுகுவத்தி போன்று தியாகம் செய்து என்னை முன்னேற்றி வருகிறார்" என்று புகழ்ந்துரைத்தார்.

இவர் அளித்த பேட்டியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் இயக்குனர் விஜயுடன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.