கோடிக்கணக்கில் சொத்து..! ஆனாலும் பல ஆண்டுகளாக பூட்டிய வீட்டுக்குள் இருந்து இப்படி ஆகிப்போன பிரபல நடிகை கனகா..! அதற்கு காரணம் என்ன?

பூட்டிய வீட்டிற்குள்ளேயே பல ஆண்டுகளாக பிரபல நடிகை முடங்கியிருக்கும் செய்தியானது கோலிவுட் திரையுலகில் வைரலாகி வருகிறது.


1980 மற்றும் 1990-களில் கோலிவுட் திரையுலகை கலக்கி வந்த கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கனகா. நடிகர் ராமராஜன் கதாநாயகனாக நடித்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களிலும் பல வெற்றி படங்களில் நடித்தார். 12 வருடங்கள் நடிகையாக ஜொலித்த அவருக்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

2013 ஆம் ஆண்டில் கனகா கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டிற்கு சென்றுவிட்டார். இநநிலையில் இவர் இறந்துவிட்டதாக அப்போது ஒரு வதந்தி பரவியது. ஆனால் தன்னுடைய தந்தை தன் சொத்துக்களை அபகரிப்பது அதற்காகவே இப்படி ஒரு கேவலமான செய்தியை பரப்பியுள்ளார் என்று கனகா அதற்கு விளக்கமளித்தார்.

இவருடைய தாயார் தேவிகா கதாநாயகியாக நடித்து சம்பாதித்த அனைத்து சொத்துக்களுக்கும் கனகா தான் ஒரே வாரிசு. தன்னிடம் உள்ள சொத்துக்களை யாராவது பறித்துவிடுவர் என்ற அச்சத்தில் நடிகை கனகா இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டை உள்பக்கமாக பூட்டி கொண்டே பல ஆண்டுகளாக தனிமையிலேயே வசித்து வருகிறார். இவளுடைய அனைத்து பரிதாபமான நிலைகளுக்கம், இவருடைய தந்தையே காரணம் என்று பலமுறை கூறியுள்ளார்

அனேக வருடங்கள் வீட்டிற்குள்ளேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்ட கனகா, சமீபத்தில் ஒரு நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து சமீபத்தில் ஒரு பிரபல தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த போது தான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பேட்டியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.