எனக்கு 15 புருசன்கள்! பட்டியலை வெளியிட்ட அமலா பால்! வாயை பிளந்த ரசிகர்கள்!

எனக்கு 15 கணவர்கள் உள்ளார்கள் என்று அமலாபால் திரைப்பட வெளியீட்டு விழாவில் கூறியது போது ஒரு மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.


கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக அமலாபால் திகழ்கிறார். இவர் நடித்த ஆடை படத்தின் ட்ரெய்லரானது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில ரசிகர்கள் அவருடைய துணிச்சலை பாராட்டியும், சிலர் அவர் ஆபாசத்தை பணிபுரிவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்தனர். 

எங்க படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அருண்பாண்டியன் பார்த்திபன் ஆகியோர் கோலிவுட் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அமலாபால் பேசிய பேச்சானது மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஒரு கட்டத்தில் தனக்கு 15 கணவர்கள் உள்ளனர் என்று கூறியதும் அரங்கில் இருந்தோர் அதிர்ந்தனர். பவிழாவில் அவர் கூறியதாவது: எனக்கு வந்த பல பட வாய்ப்புகளை கதை உண்மையாக இல்லாத காரணத்தினால் நிராகரித்தேன். ஆனால் ஆடை படம் என்னை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும். இந்த படத்தில் நடித்ததால் நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன்.

குறிப்பிட்ட காட்சி படமாக்கப்படும் போது செட்டில் கேமராமேன் உட்பட 15 பேர் தான் இருந்தார்கள். லைட் மேன் உட்பட பணியாற்றும் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அனைவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அப்போது உடனிருந்தவர்கள் மீது இருந்த நம்பிக்கைதான் பாதுகாப்பு உணர்வானது. பாஞ்சாலிக்கு 5 கணவர்கள் என்று சொல்வார்கள். அதுபோல் எனக்கு 15 பேர் கணவர்களாக இருப்பதாக உணர்ந்தேன். அவர்கள் கொடுத்த பாதுகாப்பான உணர்வுதான் என்னை பயமின்றி நடிக்க வைத்தது. இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி

அமலாபால் அந்த ஆண்களை பாராட்டும் வகையில் பேசியிருந்தாலும் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அது சரியாக சென்றடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை.