கணவனின் உயிரற்ற உடல்..! கடைசியாக கட்டிப்பிடித்து கதறி அழுத வயிற்று பிள்ளைத்தாச்சி நடிகை..! கண்ணீர்விட்ட நடிகர் அர்ஜூன்! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

பிரபல கன்னட திரைப்பட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமானது திரையுலகத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கன்னடத்திரையுலகின் மிகவும் பிரபலமான கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. இவருடைய வயது 39.  கோலிவுட்டில் வெளியான "காதல் சொல்ல வந்தேன்" என்ற படத்தின் கதாநாயகியான மேக்னா ராஜை 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிரஞ்சீவி சர்ஜா திருமணம் செய்து கொண்டார். தற்போது மேக்னா கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. தன்னுடைய பெற்றோர் சகோதரர்கள் ஆகியோருடன் சிரஞ்சீவி வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாரடைப்பு காரணமாக சிரஞ்சீவி உயிரிழந்தார் என்ற செய்தி ஒட்டுமொத்த திரையுலகத்தினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. பசவங்குடியில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்தது. கன்னட திரையுலகத்தை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் அர்ஜுன் சிரஞ்சீவி சர்ஜாவின் உடலைப் பார்த்து கதறி அழுதது அங்கிருந்தோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களான, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மற்றும் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். நேற்று அவருடைய சொந்த ஊருக்கு உடல் எடுத்து செல்லப்படும் என்றும் அங்கு அவருடைய தாத்தாவின் சடலத்திற்கு அருகே புதைக்கப்படும் என்றும் தகவல்கள் முதலில் வெளியாயின.

பின்னர் அவருக்கு பிடித்தமான பண்ணை வீட்டு தோட்டத்திலேயே அவருடைய உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அந்த பண்ணை வீட்டை சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கியுள்ளார். அந்த வீடு சர்ஜாவுக்கு மிகவும் பிடித்தது என்பதால் அங்கு அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இவருடைய மறைவு செய்தியானது ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.