பழி வாங்கிய கோலி - சாஸ்திரி ஜோடி! 33 வயதிலேயே ஓய்வை அறிவித்த அம்பதி ராயுடு! அதிர வைக்கும் காரணம்!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான அம்பத்தி ராயுடு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வெளியிட்டுள்ள தகவலானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் முதுகெலும்புகளில் ஒருவராக அம்பத்தி ராயுடு திகழ்ந்தார். ஆனால் இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய தொடரில் அந்த அளவிற்கு சோபிக்கவில்லை. 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை தேர்வு செய்தபோது அம்பத்தி ராயுடு இடம்பெறுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு எதிராக அம்பத்தி ராயுடு அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆல்ரவுண்டர் என்பதால் கோலி - சாஸ்த்ரி தலையீட்டால் விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிருப்தியடைந்த அம்பத்தி ராயுடு சமூக வலைதளங்களில் குமுறினார். 

இந்நிலையில், இந்திய தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானுக்கு உலகக் கோப்பையின் நடுவிலே காயம் ஏற்பட்டு அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போதும் ராயுடு தேர்வு ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது ரிஷாப் பண்ட் பணியில் தேர்வானார். இது அம்பத்தி ராயுடுவிற்கு பலத்த அடியாக அமைந்தது. 

மீண்டும் ஒரு வாய்ப்பு, விஜய் சங்கருக்கு அடிபட்டபோது ராயுடுவிற்கு கிடைத்தது. ஆனால் அதற்கும் வழி இல்லாதவாறு மயங்க் அகர்வால் தேர்வாகியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் அம்பத்தி ராயுடுவை கலாய்த்துள்ளனர் ‌ பெரிதும் மனமுடைந்து அம்பத்தி ராயுடு தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுவரை ராயுடு 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 1694 ரன்களை குவித்துள்ளார். 3 சதம் மற்றும் 10 அரைச்சதங்களை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது ‌