வழுக்கி விழுந்த புவனேஸ்வர் நீக்கம்! முகமது ஷமிக்கு இந்திய அணியில் இடம்!

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் தசைப்பிடிப்பு காரணமாக அடுத்த மூன்று ஆட்டங்களில் ஆட மாட்டார்.


இந்திய அணியினர் இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தன்னுடைய 4-ம் ஆட்டத்தில் விளையாடியது. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். வழக்கம்போல விராத் கோலி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை 336 ரண்களுக்கு உயர்த்தினர்.

337 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்தி ஆடிய பாகிஸ்தான் அணியினருக்கு தொடக்கம் முதலே  சிரமமாக இருந்தது. இந்திய அணியினர் கட்டுப்பாட்டுடன் பந்து வீசியதால் அவர்களால் எளிமையாக ரன் குவிக்க இயலவில்லை. 40 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்து இந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

மீண்டும் மேட்சை தொடங்க முடியாத சூழல் உண்டானதால், டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி இந்திய அணியினர் 89 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். ஆட்டத்தின் போது புவனேஸ்வர் குமார் தன்னுடைய பவுலிங் கிரீஸில் சற்று வழுக்கினார். காலில் ஏதோ அசவுகரியம் ஏற்பட்டதால் அவரால் பந்து வீச்ச தொடர இயலவில்லை.

இறுதியில் அவர் மேட்ச்சில் முழுமையாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. செய்தியாளர் சந்திப்பில் விராத் கோலி கூறுகையில், புவனேஷ்வர் குமாருக்கு ஹேம்ஸ்ட்ரிங் (hamstring injury) ஏற்பட்டுள்ளதால் அவரால் குறைந்தபட்சம் மூன்று ஆட்டங்களில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக நாம் அணியில் முகமது ஷமி இருப்பது குறிப்பிடத்தக்கது. புவனேஸ்வர் நிச்சயமாக இரண்டாம் பாதியில் விளையாடுவார் என்று நம்பிக்கை அளித்தார். சிறப்பாக பந்துவீசி கொண்டு இருந்த புவனேஷ்வர் குமாருக்கு அடிபட்டிருப்பது இந்திய ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

ஏற்கனவே தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இது இந்திய அணிக்கு இரண்டாவது பின்னடைவாகும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.