ஏற்கனவே 3 கணவர்கள்..! 52 வயதில் 4வது திருமணத்திற்கு தயாராகும் பிரபல நடிகை..! டாப் லெவல் கிசுகிசு..!

பிரபல ஹாலிவுட் நடிகையொருவர் 4-வது முறையாக திருமணம் செய்து கொள்ள ஆசையிருப்பதாக கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த காலத்தில் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் மிகவும் எளிதாக ரசிகர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஹாலிவுட் திரையுலகில் அதிகமுறை திருமணம் செய்து கொண்டவர்கள் அல்லது விவாகரத்து பெற்றவர்கள் குறித்து பல்வேறுவிதமான பரவி வருகின்றன.

இதேபோன்ற சம்பவமானது கனடா நாட்டைச் சேர்ந்த சீரியல், சினிமா, மாடலிங் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டுவந்த பிரபல நடிகை ஃபமீலா ஆண்டர்சனுக்கு ஏற்பட்டுள்ளது. இவருடைய வயது 52. இவர் ஏற்கனவே டாமி லீ, பாப் ரிட்சி, ரிக் சாலமன் என 3 பேரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 3 பேரையும் விவாகரத்து செய்துள்ளார்.

இவரை பற்றிய கிசுகிசுக்கள் கனடா திரையுலகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பேட்டி ஒன்றில் 4-வது திருமணம் செய்துகொள்வதற்கு ஆசை உள்ளதா என்று நிருபர் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், "4-வது முறையாக திருமணம் செய்து கொள்வீர்களா என்று பல ரசிகர்கள் கேட்கின்றனர். நிச்சயமாக இன்னும் ஒரே ஒரு முறை திருமணம் செய்து கொள்ள ஆசை உள்ளது. என்னுடைய கடந்த வாழ்க்கைகள் தோல்வி அடைந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். 3 பேரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்தேன். இதுவே மிகவும் அதிகம்.

ஜான் பீட்டர்ஸ் என்பவருடன் தற்போது நான் கிசுகிசுக்கப்பட்டு வருகிறேன். ஆனால் நான் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருடன் இருந்த நல்ல நினைவுகள்  அவ்வழியிலேயே சென்றுவிட்டன. நான்  காதலுணர்வு மிக்கவள். ஆதலால் என்னை குறித்து சுலபமாக அவதூறு பேசி வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.