படு வேகத்தில் எட்டி உதைத்த ரசிகர்! மன்னித்து விட்ட அர்னால்ட்! உருக வைத்த சம்பவம்!

அர்னால்டு விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாயொன்றில் தென்னாபிரிக்காவில் கலந்துகொண்டார்.


ஹாலிவுட்டின் "மசில் மேன் " என்று தன் ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் அர்னால்டு. இவருடைய நடிப்பை போற்றாத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். இவருக்கு வயது 71. இவர் அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா என்ற புகழ்பெற்ற மாகாணத்தின் முன்னாள் கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் விளையாட்டுப்போட்டிகளை பார்வையிட வந்திருந்தார். அந்த தருணத்தின் போது அவர் ரசிகர்களுடன் நின்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே வேகமாக வந்த மர்ம நபர் ஒருவர், அவரின் முதுகில் யாரும் எதிர்ப்பாராதவகையில் உதைத்துள்ளார்.

சற்று நிலைகுலைந்த அர்னால்டு பின்னர் சுதாரித்துக் கொண்டார். ஆனால் உதைத்த வேகத்தில் கீழே விழுந்த அந்த மர்ம ஆசாமி தான் கீழே விழுந்தான். அர்னால்டு தப்பித்துவிட்டார். ஆனால் அந்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். ஆனால் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று அர்னால்ட் கேட்டுக் கொண்டார்.

பின்னர் இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த அர்னால்டு, தன் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும் தான் உதை வாங்கியதை உங்களை போன்று வீடியோக்களை பார்த்துதான் தெரிந்து கொன்டேன் என்றும் யாரோ தன்னை தள்ளியதாகவே உணர்ந்தாகவும் கூறினார்.