கொரோனா நோயாளிகளுக்கு வந்துவிட்டது புதிய CPAP சுவாச கருவி..! இதன் பயன்கள் என்ன தெரியுமா?

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரபல கார் பந்தய நிறுவனம் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.


"ஃபார்முலா ஒன்" கார்பந்தய விளையாட்டில் மிகவும் முக்கியமாக குழுவாக "மெர்சிடிஸ்" திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனமானது கடந்த ஒரு வார காலமாக கொரோனா வைரஸ் தாக்குதலினால் சுவாச கோளாறுகளை சந்தித்துவரும் நோயாளிகளுக்காக ஒரு கருவியை உருவாக்குவதில் ஈடுபட்டனர்.

இறுதியாக CPAP என்றழைக்கப்படும் CONTINUOUS POSITIVE AIRWAY PRESSURE என்ற கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த கருவியானது மிக அதிக அழுத்தத்தால் நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் காற்றை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த கருவியை பயன்படுத்துவதனால் வென்டிலேட்டர்களின் தேவை குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த கருவிகளை ஏற்கனவே சீனா, மற்றும் இத்தாலி நாட்டில் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது பிரிட்டன் நாட்டிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதே நிறுவனம் மேற்கூறப்பட்ட தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ஒரு நாளைக்கு 100 முதல் 1000 கருவிகள் வரை உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளனர்.

அதேபோன்று ஃபோர்ட், ரோல்ஸ் ராயஸ் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள ஒரு அமைப்பினரிடம் 10,000 வென்டிலேட்டர்களை உருவாக்குவதற்கான ஆர்டரை பிரிட்டன் அரசாங்கம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய முயற்சிகளின் மூலம் பிரிட்டன் நாட்டின் வென்டிலேட்டர் தட்டுப்பாட்டை நீக்க இயலும் என்று அந்நாட்டு அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.