காயம் காரணமாக மிக முக்கிய பேட்ஸ்மேன் விலகல்! இங்கிலாந்துக்கு பெரும் சிக்கல்!

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேசன் ராய் தசைப்பிடிப்பு காரணமாக இரண்டு ஆட்டங்களில் விளையாட மாட்டார்


இங்கிலாந்து அணி தன்னுடைய கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடியது. முதலில் பந்து வீசிய இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசியதை வெஸ்ட் இண்டீஸ் அணியினால் தாக்குப்பிடிக்க இயலவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டனர்.

பந்துவீச்சின் போது அணியின் நட்சத்திர வீரர்களான ஜேசன் ராய் மற்றும் கேப்டன் இயான் மார்கன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் பேட்டிங்க்கு வரவே இல்லை.

ஜேசன் ராய்க்கு பதிலாக ஜோ ரூட் ஓபனிங் வந்தார். அதே போன்று ஆல்-ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் முதல் விக்கெட் விழுந்தவுடன் பேட்டிங்குக்கு வந்தார். இருவரும் திறம்பட விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமானது, ஜேசன் ராய் மற்றும் இயான் மார்கனுக்கு ரத்த காயங்களின் நிலைமை பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஜேசன் ராய்க்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு உள்ளதால் இரண்டு போட்டிகளில் விளையாட இயலாது என்று அறிவித்துள்ளது.

இயான் மோர்கனின் நிலைமையை கவனித்து வருவதாகவும் போட்டியின் முதல் நாள் முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இவ்விருவரின் உடல் தகுதியை இங்கிலாந்து அணி ரசிகர்கள் மலைபோல் நம்பி உள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.