காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பிரபல CSK வீரர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து தென்னாபிரிக்கா வேக பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து வெளியேறியுள்ளார்.


இந்தியன் பிரீமியர் லீக் 12வது சீசன் வருண் மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. கடந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்றது. கோப்பையை வென்ற உத்வேகத்துடன் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மண்ணில் களமிறங்கவுள்ளது.

சென்னையில் தொடங்கவுள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரும் 23ம் தேதி எதிர்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்சின் வேக பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

காயம் சரியாகாத காரணத்தினால் அவர் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் சென்னை அணி பவுலிங்கில் வேறு யாரை களமிறக்கப்போகிறது என்று பொறுத்திருந்து தன் பார்க்கவேண்டும்.