பிரபல நடிகரின் காதலியை தட்டித் தூக்கிய இளம் அரசியல் தலைவர்! சினிமா உலகில் பரபரப்பு!

பிரபல பாலிவுட் நடிகர்களான டைகர் ஷ்ஃராப் மற்றும் திஷா பட்டானி தற்போது பரஸ்பரமாக பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


டைகர் ஷ்ராஃப் மற்றும் திஷா பட்டாணி பாலிவுட் திரையுலகில் வலம் வரும் காதல் ஜோடிகளுள் மிகவும் பாராட்டப்பெற்ற ஜோடியாகும். இருவரும் இணைந்து பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். இருவருக்கும் இடையே உள்ள நல்ல உறவினைப் பாலிவுட் திரை உலகினர் பாராட்டியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் பிங்க்வில்லா என்னும் ஊடகத்திற்கு திஷா பட்டாணி அளித்த பேட்டியில்,  "நானும் டைகர் ஷ்ராஃப்பும் நல்ல மனநிலையில் உள்ளோம். நான் என்னுடைய விருப்பத்தை தெரிவித்துவிட்டேன். அவர் யோசித்து‌ கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.

இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இருவருக்கும் நெருக்கமானவர்கள் பிங்க்வில்லா என்ற ஊடகத்திற்கு சமீபத்தில் பேட்டியொன்றை அளித்தார். அதில் அவர் "டைகர் மட்டும் திஷாவின் உறவானது கடந்த சில நாட்களில் மிகவும் சிரமமாக இருந்துள்ளது.

இருவரும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இருவரும் பரஸ்பரமாக பிரிவதற்கு முடிவெடுத்துள்ளனர்" என்று கூறினார். மேலும் கூறுகையில், இருவருமே எந்த நிலையிலும் தங்களுடைய உறவைப்பற்றி வெளிப்படுத்தி கொள்ளவில்லை என்றும், இவருக்கும் அதே நண்பர்களே இருந்து வருகின்றனர் என்றும், இருப்பினும் காதல் மட்டுமே இல்லை என்றும் கூறினார்.

இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது அண்மைக்காலமாக நடிகை திஷா சிவசேனா கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தாக்கரேவுடன் டேட்டிங்கில் உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் இருவரும் மும்பையில் பிரபல உணவகத்திற்கு ஒன்றாக இரவு உணவு சாபபிட்டு விட்டு திரும்பினர்.

ஆதித்யா தாக்கரேவுடனான பழக்கம் கிடைத்த பிறகு திஷா டைகர் ஷ்ராப்பை தட்டிக் கழித்துள்ளார். அதே போல் ஆதித்யா தாக்கரேவும் திஷாவை டைகரை பிரிந்து வருமாறு நச்சரித்ததாகவும் அதனால் தான் டைகருக்கு திஷா டாடா காட்டியதாகவும் சொல்கிறார்கள்.