சுஷாந்த் சிங் உடல் எரியூட்டப்பட்ட நேரம்..! அவரது மைத்துனி சுதா தேவி உயிரை விட்ட துயரம்..! குடும்பத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் மர்ம மரணங்கள்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் ராஜ்புத்தின் இறுதி சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அவருடைய மைத்துனி மரணித்த சம்பவமானது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சுஷாந்த் ராஜ்புத். இவர் எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் தோனியாக நடித்திருந்தார். முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கிய இவர் பின்னர், "காய் போச்சே" என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ரசிகர்களிடையே பிரபலமானார். பாலிவுட் நடிகர்களில் சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை கொண்டவர்களில் இவரும் ஒருவர். இவருடைய வயது 34.

இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று முன்தினம் மதியம் அவர் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அன்று பிற்பகல் அவருடைய வீட்டில் இருந்து காவல்துறையினர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் தற்கொலை செய்வதற்கு முன்னர் சுஷாந்த் சிங் ராஜ்புத், அதற்கு முந்தைய இரவில் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு வீட்டிலேயே பார்ட்டி கொடுத்துள்ளார். இதற்கு அவர் அனைத்து நண்பர்களையும் அழைக்கவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே அவர் அழைத்திருந்தார். மேலும் முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் அவர் அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி வரை பார்ட்டியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர் அவருடைய வீட்டிற்கு சென்றுவிட்டனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய அறைக்கு சென்று உறங்க தொடங்கிவிட்டார். நேற்று முன்தினம் காலையில் வீட்டு வேலை செய்பவர்கள் வீடு முழுவதையும் சுத்தம் செய்துவிட்டு சுஷாந்த் அறைக்கு சென்றுள்ளனர். ஆனால் கதவு மூடப்பட்டிருந்ததால், அவர்களை பின் உறங்கி கொண்டிருப்பதாக நினைத்திருந்தனர்.

மதியம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் பணியாளர்கள் சந்தேகித்துள்ளனர். உடனடியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் உறவினர்கள் அவருடைய வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அவர் படுக்கையில் சடலமாக இருந்ததை கண்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன்பிறகு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் இறந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலானது. பிரதமர் நரேந்திர மோடி முதல் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இவருடைய மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மன அழுத்தத்தால் உயிரிழந்தார் என்று அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் அவருடைய  இறுதி சடங்குகள் நேற்று மும்பையில் நடைபெற்றன. இறுதி சடங்குகள் நடைபெற்று கொண்டிருந்த போது, அந்த குடும்பத்திற்கு இடி விழுந்தது போன்று மற்றொரு சம்பவமும் அரங்கேறியுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மைத்துனி சுதா தேவி, சுஷாந்த் இறந்த செய்தியை கேட்டதிலிருந்து சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார். 

ஏற்கனவே பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர் சுஷாந்த்தை நினைத்துக்கொண்டே சாப்பிடாமல் இருந்ததில் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் அவருடைய சொந்த ஊரான பீகாரில் இறந்துவிட்டார் என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. 

2 நாட்களில் குடும்பத்தை சேர்ந்த 2 பேன் இறந்துள்ள சம்பவமானது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.