எனது காதலனால் 18 வயது இளம் பெண் கர்ப்பமாக இருக்கிறார்..! சிம்பு பட நடிகை வெளியிட்ட படு அதிர்ச்சி சீக்ரெட்!

புகழ்ப்பெற்ற பாலிவுட் நடிகை தன்னுடைய முன்னாள் காதலன் குறித்து பாலியல் ரீதியில் புகார் அளித்துள்ள செய்தியானது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சனாகான். இவர் கடந்த சில வருடங்களாக மெல்வின் லூயிஸ் என்ற வெளிநாட்டவரை காதலித்து வந்தார். இருவரும் இணைந்து பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். பல புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர். இது சமூக வலைத்தளங்களில் பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அதன் பின்னர் நிகழ்ந்தவற்றை சமூக வலைத்தள வாசிகளால் புரிந்து கொள்ள இயலவில்லை. நடிகை சனாகான் தன் முன்னாள் காதலர் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகிறார்.

அவர் பதிவு செய்ததாவது, "ஒரு பெண் திடீரென்று எனக்கு கால் செய்தார். அவரிடம் கேட்டபோது, என்னுடைய முன்னாள் காதலனான மெல்வின் லூயிஸ், 17 வயதான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறினார். அதற்கான ஆதாரங்களையும் என்னிடம் கொடுத்தார். மற்றொரு பெண் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தி கொள்ள விருப்பமில்லாமல், மெல்வின் லூயிஸ் அவரை கற்பழித்ததை கதறி அழுது கூறினார்.

அதோடு நில்லாமல் 13 வயது இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து அவரை கற்பழித்ததும் எனக்கு தெரிய வந்துள்ளது. இவ்வளவு கேடுகெட்ட வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு, எனக்கு அவர் வாழ்க்கையை வாழும் முறை குறித்து கற்றுக்கொடுத்தார். இதற்கு நான் மிகவும் வெட்கப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மெல்வின் லூயிஸ் எந்த விதத்தில் பதிலளிப்பார் என்பது குறித்து சமூகவலைத்தள வாசிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.