பொது இடத்தில் காதலனுக்கு உதட்டு முத்தம்..! வைரலாகும் பிரபல நடிகரின் தங்கை புகைப்படம்! யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகரின் தங்கை காதலனுடன் மிகவும் நெருங்கி பழகி வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃப். இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வது மிகவும் கில்லாடி. அவ்வப்போது சமூக வலைதளங்களில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவர். இவருடைய தங்கையின் பெயர் கிருஷ்ணா ஷ்ராஃப்.

கிருஷ்ணாவும் உடற்பயிற்சி ஆர்வலர் ஆவார். இவர் எபான் ஹியாம்ஸ் என்ற இளைஞரை காதலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருவரும் சமீபகாலங்களில் நன்றாக நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் இருவரும் ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள கடற்கரைக்கு சென்று சில நாட்களை சந்தோஷமாக கழித்துள்ளனர். தற்போது இவர்கள் துபாயில் உள்ள தண்ணீர் அருங்காட்சியகத்திற்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஒரு புகைப்படத்தில் இருவரும், "உதட்டோடு உதடு" முத்தம் அளித்திருப்பது போல் அமைந்துள்ளது. இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் டைகர் ஷ்ராஃப் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள "பாஃகி 3" திரைப்படம் 6-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் விழாவில் கலந்து கொள்வதற்காக டைகர் ஷ்ராஃப் தன்னுடைய குடும்பத்தினருடன் துபாயில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. நாளை டைகர் ஷ்ராஃப்பின் பிறந்த நாளும் என்பது குறிப்பிடத்தக்கது.