மைதானத்தில் இந்திய நடிகரிடம் தகராறு! பாகிஸ்தான் ரசிகரின் தகாத செயலால் அதிர்ச்சி!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின் போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாலிவுட் நடிகர் சைப் அலிகானுடன் தகராறு செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பாலிவுட் திரையுலகில் வெற்றி வலம் வரும் முன்னணி நடிகர்களுள் சைப் அலி கானும் ஒருவராவார். இவர் பெரிய கிரிக்கெட் ரசிகரும் கூட. இந்தியா பாகிஸ்தான் இடையே மான்செஸ்டர் நகரில் 16-ஆம் தேதியன்று நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தை காண சென்றார்.

இவர் பாலிவுட்டில் தன்னுடைய முதல் படத்தை நடிக்கவிருக்கும்  அலையா பர்ணிச்சர்வாலா என்ற நடிகையுடன் மைதானத்திற்கு சென்றார். இவர்கள்   "ஜவாஜானேமான்" என்னும் படத்திற்காக இங்கிலாந்து நாட்டில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தில் சைப் அலிகானின் மகளாக அலையா நடித்துள்ளார்.

மைதானத்திற்குள் நுழையும் போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இவரிடம் தகராறு செய்துள்ளார். அதாவது அந்த ரசிகர் சைப் அலிகானை இந்திய அணியின் மாற்று வீரர் என்றும், தண்ணீர் எடுத்துச் செல்லும் "வாட்டர் பாய்" என்றும் கலாய்த்துள்ளார். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் பெருந்தன்மையுடன் சயப் அலி கான் அங்கிருந்து சென்றார்.

இருநாட்டு ரசிகர்களும் போட்டியினை போட்டியாகவே பார்க்க வேண்டுமே தவிர வாக்குவாதங்களில் நாகரிகமற்ற செயல்களை விட்டும் ஈடுபடுதல் கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.