வெறும் 26 வயதில் திடீரென உயிரிழந்த பிரபல இளம் நடிகர்..! காரணம் கேன்சர்..! அதிர்ச்சி சம்பவம்!

பிரபல பாலிவுட் நடிகரொருவர் கேன்சரால் 26 வயதிலேயே இறந்திருப்பது திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவர் மோகித் பாகெல். இவருடைய வயது 26. இவர் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள மதுராவை சேர்ந்தவர். இவர் புகழ்பெற்ற கதாநாயகியான சல்மான்கானுடன் "ரெடி" என்ற திரைப்படத்தில் "அமர் சௌத்ரி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த 6 மாதங்களாக, புற்றுநோய்க்கு சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நோய் முற்றியதால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை தன்னுடைய வீட்டிலேயே மோகித் பாகெல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இவருடன் எழுத்தாளராக பணியாற்றிய ராஜ் கூறுகையில், "நான் இயக்கும் முதல் திரைப்படத்தில் அவரை கதாநாயகனாக போட முடிவெடுத்தேன். அவர் மிகவும் திறமையான நடிகர். அவருடைய நகைச்சுவை பிரமாதமாக இருக்கும். அவை ஏற்கனவே "மிலன் டாக்கீஸ்" மற்றும் பியூட்டி அவுர் பப்ளி-2" ஆகிய இரு திரைப்படங்களில் நடித்த வந்திருந்ததால் என்னுடைய முதல் படத்தில் அவரை நடிக்க வைக்க இயலாமல் போனது.

நாங்கள் இறுதியாக 15-ஆம் தேதியன்று பேசினோம். அப்போது அவர் நலமாக இருந்தார். இந்நிலையில் அவருடைய மரண செய்தியை இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் மூலம் நான் தெரிந்து கொண்டேன். அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.

மோகித் பாகெல் மறைவுக்கு திரையுலகத்தினர் பலர் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருடைய மறைவு செய்தியானது திரையுலகத்தினர் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.