இன்று நியுசிலாந்துடன் பலப்பரீட்சை! நேற்று சூப்பர் ஸ்டார் திரைப்படம்! இந்திய அணியை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!

இங்கிலாந்து நாட்டில் நடக்கும் உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியினர் "பாரத்" திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.


இந்திய அணி இன்று  நடக்கவிருக்கும் உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியினரை எதிர்கொள்ள உள்ளனர். இந்நிலையில் நேற்று அணியின் வீரர்களான ஹர்திக் பாண்டியா, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி ஆகியோர் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான்கான் நடிப்பில் வெளிவந்த "பாரத்" படத்தை திரையரங்கில் கண்டுள்ளனர்.

கேதார் ஜாதவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்வுபற்றி பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவிற்கு நன்றி செலுத்தும் வகையில், சல்மான்கான் மறு பதிவு ஒன்றை செய்துள்ளார். அதாவது "பாரத் திரைப்படத்தை கண்ட என் சகோதரர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். வெல்க பாரதம்" என்று பதிவிட்டார்.

இந்த திரைப்படமானது முதல் நாளில் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் வசூலானது சிறிதளவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரினால் பாதிக்கப்பட உள்ளது. வரும் 16ம் தேதி நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை ஆட்டமானது பெரிதளவில் இந்தப் படத்தின் வசூலை பாதிக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

சல்மான் கானின் திரையுலக வரலாற்றில் முதல் நாளில் அதிகபட்ச வசூலை ஈட்டிய படம் பாரத் ஆகும். தன் ரசிகர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் " பாரத் திரைப்படத்தை கண்ட அனைத்து மக்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். என் திரைத்துறை வரலாற்றில் இவ்வளவு அதிக வசூலை அளித்த என் ரசிகர்களுக்கும் படத்தை கண்ட அனைவருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று பதிவு செய்தார்.

பாரத் படத்தின் வெற்றியானது சல்மான்கானுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலம் வாய்ந்த நியுசிலாந்துடன் இன்று மோத உள்ள நிலையில் இந்திய வீரர்கள் சினிமா படம் பார்த்துவிட்டு வந்தால் அவர்களால் எப்படி இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.