பிஸ்கட் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு! மேலும் தொடர வாய்ப்பு இருக்கிறதாம்!

உலகின் பிரபல பிஸ்கட் நிறுவனமானது சரிவை சமாளிப்பதற்காக 10,000 பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகின் பிரபல பிஸ்கட் நிறுவனங்களுள் ஒன்று பார்லே. இந்த நிறுவனமானது பார்லே-ஜி மொனாக்கோ,ஹைட் அண்ட் சீக், மிலானோ ஆகிய பிஸ்கட்களை தயாரித்து வருகிறது. பார்லே நிறுவனத்தில் மொத்தம் 1 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். ஒரு ஆண்டின் வருவாயானது கிட்டத்தட்ட 10,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

பிஸ்கட்களுக்கு 5 முதல் 12 சதவீதம் வரையிலான ஜி.எஸ்.டி போடப்பட்டிருந்தது. ஆனால் அது 18 ஆக உயர்ந்த பிறகு பிஸ்கெட் நிறுவனங்கள் சரிவை சந்திக்க தொடங்கின. இந்த சரிவானது தங்களுக்கும் ஏற்பட்டுள்ளதாக பார்லே நிறுவனம் கூறியுள்ளது. 

பார்லி நிறுவனமானது பிஸ்கட் மீதான வரியை மீண்டும் 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டால் உற்பத்தியை குறைத்து கொள்வோம். மேலும் கூடுதல் நடவடிக்கையாக, நிறுவனத்தை சரிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக 8,000 முதல் 10,000-க்கும் மேலான பணியாளர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றுவதற்கு வாய்ப்பிருப்பதாக 

இவ்வாறு பார்லே நிறுவனத்தின் தயாரிப்பு நிறுவனத் தலைவரான மயாங்க் ஷா பேட்டி அளித்துள்ளார்.