எனக்கு கல்யாணம் ஆகவில்லை! ஆனால் மகள் இருக்கிறாள்! பிரபல நடிகையின் சீக்ரெட் அம்பலம்!

பிரபல பாலிவுட் நடிகையொருவர் தனக்கு  திருமணம் ஆகவில்லை என்று கூறிய சமயத்திலே 3 வயது குழந்தை உள்ளது என்று கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட் நடிகைகளுள் மிகவும் கவர்ச்சியாக நடிப்பவர் மேஹி கில். இவருக்கு தற்போது 43 வயது நிரம்பியுள்ளது. இவர் சாஹேப்,பிவி அவுர் கேங்ஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், "ஃபேமிலி ஆஃப் தாக்குர்கன்ஜ்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு சமூக வலைதளத்திற்கு பேட்டியளித்தார். அதில் அவர்," நான் 3 வயது குழந்தையின் தாயாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். நான் எதையும் யாரிடத்தில் இருந்தும் மறைத்ததில்லை. தற்போது நான் ஒருவரை டேட்டிங் செய்து வருகிறேன். இதுவரை எனக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் திருமணம் செய்து கொள்வதற்கு விரும்புகிறேன்" என்று கூறினார்.

இந்த பேட்டியானது ஒரு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் சிலர், திருமணமாகாமல் எவ்வாறு 3 வயது குழந்தைக்கு தாயாக முடியும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

இவர் சமீபத்தில் நடித்து முடித்த "ஃபேமிலி ஆஃப் தாக்குர்கன்ஜ்" என்னும் திரைப்படம் ஜூலை மாதம் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.