ஆம்பளைங்க மட்டும் தான் செய்வீங்களா? என்னாலயும் முடியும்! மகள்களுடன் சேர்ந்து அசர வைத்த நடிகை!

பிரபல நடிகை பாட்டில் கேப் சேலஞ்ச் மேற்கொண்ட சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் மிஸ் இந்தியாவுமான சுஷ்மிதா சென் தன் காதலரான ரோமன் ஷாலுடன் பல்வேறு இடங்களை சுற்றி வருவது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் சுஷ்மிதா சென், பாலிவுட் திரையுலகினரை வெகுவாக கவர்ந்து வரும் "பாட்டில் கேப் சேலஞ்சை" மேற்கொண்டுள்ளார். இதன் வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இந்த சேலஞ்சை அவருடைய காதலரான ரோமன் ஷால் மற்றும் அவருடைய மகள்களான ரென்னி மற்றும் ஆலிசா மேற்கொண்டனர். சுஷ்மிதா சென் சமூக வலைத்தளத்தில் "ஆண்கள் ஏன் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்" என்று பதிவு செய்து இந்த வீடியோவை அப்லோட் செய்தார்

"பாட்டில் கேப் சேலஞ்சை" முதன்முதலில் பாலிவுட்டில் அக்ஷய் குமார் அறிமுகப்படுத்தினார். அவருக்குப் பின்னர் டைகர் ஷ்ராஃப், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் இதனை முயற்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.