எப்போதும் உனக்கான மூடாக நான் இருப்பேன்!பிரபல நடிகை கூறிய செக்ஸி பர்த் டே வாழ்த்து! யாருக்கு தெரியுமா?

தன்னுடைய கணவரின் பிறந்தநாளில் பிரபல நடிகை வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலிவுட்டிலும், பாலிவுட்டிலும் முதன்மை கதாநாயகியாக திகழ்ந்தவர்களில் நடிகை ஜெனிலியாவும் ஒருவர். 2003-ஆம் ஆண்டில் வெளிவந்த "துஜே மேரி கஸாம்" என்ற திரைப்படத்தின் நடித்த ரித்தேஷ் தேஷ்முக் என்பவருக்கும் ஜெனிலியாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் 8 ஆண்கள் காதல் செய்த பின்னர் 2012-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

சென்ற வாரம் ரித்தேஷ் தேஷ்முக் தன்னுடைய 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு அவருடைய மனைவியான ஜெனிலியா சமூக வலைதளங்களில் வித்தியாசமான முறையில் வாழ்த்திருந்தார். அதாவது, "ஐ லவ் யூ. தற்போது மட்டுமில்லை, 100 ஆண்டுகள் கழித்தும் நான் கூறுவேன். என்னுடைய நிகழ்காலமும் நீ. என்னுடைய வருங்காலமும் நீ. என்றுமே நான் உனக்காக காத்திருப்பேன்" என்று வாழ்த்தினார். 

இந்த வாழ்த்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் லைக்குகளை அள்ளி வீசியிருந்தனர். பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் ரித்தேஷ் தேஷ்முக்குக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.