ஏன்டா அப்டி பண்ணுன? செய்தியாளரை புரட்டி எடுத்த பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகைகளுள் ஒருவர் கங்கனா ராவத். இவர் நடித்த பல படங்கள் வெற்றியடைந்தன. ஆனால் இவருடைய முன்கோபத்தினாலும், நேர்மறையான பேசினாலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் தான் நடித்து வெளிவர இருக்கும் "ஜஜ்மென்டல் ஹை கியா" இன்னும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவானது மும்பையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கங்கனா பதிலளிக்க மறுத்தார்.

இதனால் ஆவேசமடைந்த செய்தியாளர் கூச்சலிட தொடங்கினார். அப்போது கங்கனா ராவத் தான் நடித்த மணிகர்ணிகா என்னும் படத்திற்கு ஏன் தகுதியற்ற விமர்சனங்களை கூறினீர்கள் என்று வினவினார்.  அந்தப்படம் தேசியத்தை மையப்படுத்தி இருந்ததால் செய்தியாளர் தன்னை மூர்க்கமான பெண் என்று குற்றம் சாட்டுவதாக கங்கனா ராவத் பொதுவெளியில் கத்தினார்.

பதிலளித்த செய்தியாளர், தன்னை கங்கனா மிரட்டி வருவதாகவும், கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க திராணியில்லாததால் ஆவேசம் அடைகிறார் என்று குற்றம் சாட்டினார். இந்த வாக்குவாதத்தினால் இசை வெளியீட்டு விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது