பிரபல டிவி நடிகை ஹாஸ்பிடலில் திடீர் அட்மிட்! பதறிய கணவன்! காரணம் இது தான்..!

பாலிவுட் நடிகையான தீபிகா கக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வளர்ந்துவரும் பாலிவுட் நடிகைகள் தீபிகா கக்கர் ஒருவர். ஹிந்தி மொழியில் நிகழ்ந்த 12-வது பிக்பாஸ் சீசனின் வெற்றியாளர் ஆவார். அந்த சீசனில் ஸ்ரீசாந்த் முதலிய பல பிரபலங்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இவருடைய கணவரின் பெயர் ஷோயப் இப்ராஹிம். தீபிகா மருத்துவமனையில் உள்ள புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 

அந்த புகைப்படத்தின் கீழே, "சீக்கிரம் குணமாகிவிடு குழந்தை. அவருடைய உடல்நிலை முன்னேற்றத்திற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

நிறைய நடிகர் நடிகைகள் தீபிகா உடல் நலம் முன்னேற தங்களது இதயபூர்வமான வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். நடிகை தீபிகா சிங், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "சீக்கிரம் குணமாகிவிடு. இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவு செய்து இருந்தார்.

இவர் தற்போது இந்தி மொழியில் "கஹான் ஹம் கஹான் ஹம்" என்ற நிகழ்ச்சியில் நடித்துவருகிறார். இந்த நிகழ்ச்சியில் கரண் குரோவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியானது தொடக்கத்திலிருந்தே டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடம் வகித்து வருகிறது.

இவருடைய உடல்நிலை முன்னேற்றம் அடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.