குளித்து முடித்த பிறகு ஒரு கப் சூடான யூரின்..! சிறுநீரை குடிக்கும் வீடியோவை வெளியிட்ட பாடகி!

பிரபல அமெரிக்க பாடகி சிறுநீர் குடிப்பதை வீடியோவாக வெளியிட்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல அமெரிக்க பாடகிகளில் ஒருவர் மடோனா. இவருடைய பாடல்கள் உலக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தற்போது "மேடம் எக்ஸ் டூர்" என்று நிகழ்ச்சிக்காக பயணத்தில் உள்ளார். இதனிடையே 17-ஆம் தேதியன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மடோனா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

"ஐஸ் குளியலை தொடங்கலாமா?? காயங்களுக்கு சிறந்த சிகிச்சை" என்று அந்த வீடியோவில் பதிவு செய்திருந்தார். ஐஸ் குளியலை தொடங்கியவுடன் சிறிது நேரம் நடிகர் அஹ்மலிக்குடன் உற்சாகமாக மடோனா உரையாடிக்கொண்டிருந்தார்.

அதன்பின், "ஐஸ் குளியலுக்கு பின்னர் சிறுநீர் குடிப்பது மிகவும் நல்லது" என்று கூறி ஒரு சிறிய கப்பில் சிறுநீரை பருகுகிறார். இந்த வீடியோவை தன்னுடைய ரசிகர் பெருமக்களுக்காக அதிகாலை 3 மணியளவில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

சிறுநீரை மடோனா மருத்துவ முறையாக பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.