படுக்கையில் அறையில் இளம் பெண்ணுடன் நிர்வாணமாக இருந்த நடிகர்! நேரில் பார்த்த வருங்கால மனைவி! அதிர்ச்சி சம்பவம்!

வருங்கால கணவன் வேறொரு பெண்ணுடன் நிர்வாணமாக இருப்பதை கண்ட மணமகள் புகார் அளித்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜவி மராகுன் என்பவர் அமெரிக்க நடிகர். இவருக்கு 2017ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இவருக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். அதன்பின்னர் இவருக்கு லாரென் என்ற இளம் பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.

இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவிலேயே திருமணமும் நடப்பதாக இருந்தது.

இதனிடையே ஜவி தன்னுடைய வீட்டில் மது விருந்து அளித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களினால் லாரெனால் கலந்துக்கொள்ள இயலவில்லை. ஆனால் விருந்து முடிந்த பின்னர் ஜவியை காண்பதற்கு லாரென் சென்றார். அப்போது தன் வீட்டின் படுக்கையறையில் ஜவி வேறு ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக இருப்பதை கண்டு லாரென் அதிர்ச்சி அடைந்தார். கண்ணீர் மல்க அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இருவரும் சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் பின்பற்றி கொள்வதை நிறுத்திக்கொண்டனர். மனம் நெகிழ ஜவி தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறுகையில், "நான் மிகவும் நேசித்த பெண்ணை காயப்படுத்திவிட்டேன். மன்னிப்பு கேட்க அருகதையற்றவன். நிச்சயம் என்னை ஒரு நாள் நீ மன்னிப்பாய் என்று நம்புகிறேன்.

என் வீட்டிற்கு உன்னை அழைத்து வர நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன்" என்று கூறியிருந்தார். இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.