“அந்த தொழில்” ஹோட்டலையே விலைக்கு வாங்கும் பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் தனது தொழிலை விரிவுபடுத்த ஓட்டல் ஒன்றை விலைக்கு வாங்க உள்ளதாக வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளார்.


தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார் இவர். ஒரே நேரத்தில் சூர்யா மற்றும் கார்த்தியுடன் தற்போது ரகுல் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே படத்திலும், கார்த்திக்கு ஜோடியாக தேவ் படத்திலும் ரகுல் நடித்துள்ளார்.

   தீரன் அதிகாரம் ஒன்று வெற்றியை தொடர்ந்து ரகுலுக்கு தனது தேவ் படத்திலும் கார்த்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். இதே போல் தனது தம்பி யாருடன் நடித்தாலும் அதே நடிகையை தனக்கும் ஜோடியாக்குபவர் சூர்யா. அந்த வகையில் ரகுல் ப்ரீத் சிங்கை தனக்கு என்.ஜி.கே படத்தில் சூர்யா ஜோடியாக்கியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் ரகுல் ப்ரீத் நடித்து வருகிறார்.

   இது தவிர இந்தி மற்றும் தெலுங்கிலும் தலா ஒரு படத்தில் ரகுல் நடித்து வருகிறார். அதாவது ஒரே நேரத்தில் ஐந்து பெரிய படங்களில் ரகுல் ப்ரீத் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த அளவிற்குதிரையுலகில் பிசியாக இருந்தாலும் கூட ரகுல் ப்ரீத் சிங்குக்கு சைட் பிசினசில் ஆர்வம் அதிகம். அதிலும் ஜிம் மீது ரகுலுக்கு அதிக ஆசை. இதனால் ஐதராபாத்தில் சொந்தமாக ஜிம் ஒன்றை ரகுல் நடத்தி வருகிறார்.

   இந்த நிலையில் புதிதாக ஒரு தொழிலை தொடங்க உள்ளதாக ரகுல் அறிவித்துள்ளார். தனக்கு உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ள ரகுல், இந்தியாவில் உள்ள பிரபல உணவுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் ஏற்பாடு செய்யும் வகையில் ஒரு உணவகம் திறக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால ஆசை என்று கூறியுள்ள ரகுல் இதற்காக ஓட்டல் ஒன்றை விலை பேசி வருவதாக கூறியுள்ளார்.

   விரைவில் ஓட்டலை திறந்து புதிய பிசினஸ் தொடங்க உள்ளதாகவும் ரகுல் கூறியுள்ளார். திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள ரகுல் ப்ரீத் சிங் திடீரென ஓட்டலை வாங்கி தொழிலை விரிவுபடுத்துவதாக கூறியிருப்பது மார்க்கெட் இழந்த பிறகு அவருக்கு பல விதங்களிலும் உதவியாக இருக்கும் என்று திரையுலகினர் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

   ஹோட்டல் வாங்க உள்ளது குறித்து ரகுல் கொடுத்த பேட்டி திரையுலகினர் இரட்டை அர்த்தத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் தான் ஹோட்டல் வாங்க இருப்பது டீசன்டான தொழில் நடத்துவதற்கு தானே தவிர வேறு எதற்கும் இல்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். எது எப்படியோ ரகுல் கூறுவது உண்மையாக இருந்தால் சரி.