கடன் வசூல் என்ற பெயரில் குடும்ப பெண்களை அடிமைப்படுத்தி கொடுமை படுத்திகிறார்கள் - பி.ஆர்.பாண்டியன்

மளிகைக்கடைகள், வணிக நிறுவனங்கள் வியாபாரமின்றி பறி தவிக்கின்றனர்.


இந்நிலையில் 20 பேர் கொண்ட மகளிர் குழுக்களிடம் கிராம விடியல், L&T போன்ற பல்வேறு நிதி நிறுவனங்கள் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் குழுக் கடன்கள் வழங்கி உள்ளனர். அவ்வாறு கடன் பெற்றவர்கள் வருமானம் இல்லாததால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் கடன் வசூல் என்ற பெயரில் குடும்ப பெண்களை அடிமைப்படுத்தி கொடுமை படுத்தும் நடவடிக்கையில் நிதி நிறுவனங்கள் கிராமப்புறங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண்மணி விடியல் நிதி நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ 80000 ம் மளிகை கடை நடத்த கடன் பெற்று மளிகை பொருட்கள் வாங்கி கடை நடத்தி வந்துள்ளார். அக் கடனுக்கு காப்பீடு செய்ய விடியல் நிறுவனம் மூலம் பிரீமியமும் செலுத்தி உள்ளார்.

இந்நிலையில் திடீரென கடந்த 6ம் தேதி கடைதீபற்றி எரிந்து நாசமாகி விட்டது. தற்போது காப்பீட்டிற்க்கான இழப்பீடு பெற்று தர கேட்டால் நாங்கள் கடைக்கு காப்பீடு செலுத்தவில்லையென்றும், தனிநபர் காப்பீடு மட்டுமே செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஒன்றும் அறியாத பெண்களிடம் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களுக்கு முரணாக மோசடி செயலிலும் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. 

இது குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்களிடம் முறையிட்டால் எங்களுக்கு அதிகாரமில்லை என கைவிரிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர்களிடம் கூறியும் பலனில்லை. எனவே தமிழக அரசு மாவட்டம் தோறும் சிறப்பு விசாரனைக் குழுக்கள் அமைத்து கிராம விடியல் போன்ற மோசடி நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கந்து வட்டி கொடுமையிலிருந்து கிராமப்புற பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.