வெளிநாட்டில் இருந்து மனைவியை பார்க்க ஓடோடி வந்த இளைஞர்! நொடியில் அரங்கேறிய விபரீதம்! நொறுங்கிய குடும்பம்!

பணி நிமித்தமாக வெளிநாடு சென்று சொந்த நாட்டுக்கு திரும்பிய வாலிபர் , விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


சேலம் மாவட்டத்தை சார்ந்த அசன் முகமது ( வயது 50 ) , கடந்த ஓராண்டு காலமாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் சபிதா கனி(வயது 45 ). இந்த தம்பதியினருக்கு 13 வயது உடைய அமிதா பானு(13) என்று ஒரு மகள் இருக்கிறார். கடந்த ஓராண்டு காலமாக சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் , தன்னுடைய விடுமுறை நாட்களில் குழந்தை மற்றும் குடும்ப குடும்பத்தினரை காண்பதற்காக ஆசையாக தாய்நாடு திரும்பியுள்ளார்.

அசன் வந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை தரை இறங்கியுள்ளது. இந்நிலையில் கணவரை விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக குடும்பத்தினருடன் சபிதா கனி விமான நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். 

அதற்குப் பின்பு அசன் மற்றும் உறவினர்கள் அனைவரும் இணைந்து திருச்சி விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பியுள்ளனர். அசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் பயணித்த கார் ஆனது உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள ஓலையூர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அதனுடைய பின்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வெளிநாட்டிலிருந்து ஆசைஆசையாக குடும்பத்தை காண வந்த அசன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர் காரில் இருந்த மற்ற உறவினர்களான சபிதா கனி, அமிதா பானு, சர்புதீன், ஷலா உதயன் , ரகமத்துல்லா , பாத்திமா பீவி , ஷாகிராபானு , ஓட்டுநர் சிவா ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர்களை காப்பாற்றி அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அசனின் மனைவி சபிதா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணங்களும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.