தூங்கி எழுந்த 3 பெண் பிள்ளைகள்! தேனீரில் விஷம் கலந்து கொடுத்த தாய்! அதிர வைக்கும் தேனி சம்பவம்!

தாயொருவர் விஷம் கலந்த தேநீரை மகள்களுக்கு கொடுத்து, தானும் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனி மாவட்டத்தில் போடி எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு லட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அக்ஷயா (7), அனுசியா (19), ஐஸ்வர்யா (16) என்று 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் மறைந்த பிறகு மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். 

குடும்பம் வறுமையில் சிக்கி தவிக்கும் போது லட்சுமியின் அண்ணன் பண உதவி செய்து வறுமையின் பிடியிலிருந்து குடும்பத்தை மீட்டு வந்தார். ஆனால் தொடர்ந்து அவரிடம் உதவி கேட்பதற்கு லட்சுமிக்கு சங்கடமாக இருந்தது. மேலும் வறுமை அதிகரித்துக் கொண்டே போனதால் வாழ்க்கையின் மீது லட்சுமிக்கு வெறுப்பு வர தொடங்கியது. 

இதனால் குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு லட்சுமி வந்துள்ளார். 

3-ஆம் தேதியன்று லக்ஷ்மி தன்னுடைய 3 மகள்களையும் எழுப்பி தேனீர் கொடுத்துள்ளார். அந்த தேநீரில் ஒரு பங்கை தாமும் குடித்துள்ளார். தேநீர் குடித்தவுடன் 4 பேரும் வாயில் நுரை தள்ளிய வாறு மயங்கி விழுந்தனர். தற்கொலை செய்துகொள்வதற்காக லக்ஷ்மி தேநீரில் விஷம் கலந்திருந்தார்.

4 பேரும் வாயில் நுரை தள்ளி எவ்வாறு தரையில் கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் பதறி அடித்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் போதே அனுஷ்யாவும், ஐஸ்வர்யாவும் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.

லக்ஷ்மி மற்றும் அக்ஷயாவின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர்களை தேனி அரசு பொது மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றினர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை லக்ஷ்மி உயிரிழந்துள்ளார். அக்ஷயா உயிருக்கு போராடி வருகிறார். 

இந்த சம்பவமானது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.