மகள் திருமணம் முடிந்து வீடு திரும்பிய தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வீடு முழுவதும் மிளகாய் பொடி! நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்த பரிதாபம்!

கல்யாண சீர்வரிசை நகைகள் திருடப்பட்ட சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள கிராமணி என்னும் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 50. இவருடைய மூத்த மகளின் பெயர் பவித்ரா. பவித்ராவுக்கு இன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

திருமணத்திற்காக சரவணன் தன் குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு சென்றார். திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று சரவணன் தன் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது, தன் மகளின் திருமண சீறாக வைத்திருந்தோம் 100 சவரன் தங்க நகைகளும், 1.35 லட்சம் ரொக்க பணமும் திருடப்பட்டிருந்தது. இதனால் பதறிப்போன சரவணன் வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருடிய மர்ம கும்பல் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி இருப்பதால் கண்டுபிடிப்பதற்கு காவல்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர். மகளுக்காக சீராக கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் மட்டுமில்லாமல், பழைய தங்க நகைகளையும் திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவமானது வாலாஜாபேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.