6 வயது மகள்! 3 வயது மகன்! பிறகு கணவன் - மனைவி! 4 பேரும் சடலமாக தொங்கிய பகீர் சம்பவம்! அதிர்ச்சி காரணம்!

புனேவில் கணவன் மனைவி இருவரும் இணைந்து தங்களுடைய இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புனேவில் அதுல் ஷிண்டே மற்றும் ஜெயா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆறு வயதில் ரூக்வித் என்ற மகனும் மூன்று வயதில் அந்தரா என்ற மகளும் உள்ளனர். ஷிண்டே அதே பகுதியில் பள்ளி குழந்தைகள் அணியும் அடையாள அட்டை தயார் செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரையும் உறவினர்கள் வெகுநேரமாக தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். வெகு நேரமாக முயற்சி செய்தும் அவர்களை தொடர்பு கொள்ள இயலாததால் சந்தேகம் எழுந்துள்ளது.

உடனடியாக அவர்கள் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் உடனே ஷிண்டேவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அவர்களின் வீட்டு கதவு உள்புறமாக பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்ற காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஷிண்டே அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய அனைவரும் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனையடுத்து போலீசார் நான்கு பேரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது, அடையாள அட்டை தயார் செய்யும் தொழிலை செய்து வந்த ஷிண்டே தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் கடும் நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால்தான் கணவன் மனைவி இருவரும் இணைந்து தங்களது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு பின்னர் அவர்களும் தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.