போலீஸ் காவலில் முஸ்லீம் பெண்களுக்கு அடி உதை..! தீயாய் பரவும் வீடியோவின் உண்மை பின்னணி!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பொய்யான வீடியோக்களை மர்ம கும்பல் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனை பயன்டுத்திக்கொள்ளும் கலவர கும்பலொன்று, 6 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நாட்டில் போராட்டம் நடத்திய காவல்துறையினர் புர்கா பெண்மீது நடந்த தாக்குதலை இந்தியாவில் நிகழ்ந்தது போன்று வாட்ஸ்அப்பில் பரப்பி வருகின்றனர். இது நம் நாட்டிலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில் மிகவும் எளிதாக பாகிஸ்தான் காவல்துறையினர் இருப்பதை நம்மால் கண்டறிய இயல்கிறது. அப்போது இயல்பாகவே பாகிஸ்தான் காவல்துறையினரால் எவ்வாறு இந்திய நாட்டிற்குள் நுழைய முடியும் என்ற கேள்வியின் மூலம் இது வதந்தி என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்த வதந்திகளை பரப்புவதன்மூலம் நாட்டு மக்களிடையே நிலவும் சகோதரத்துவத்தை கெடுப்பதற்காக சில அந்நிய சக்திகள் முயற்சித்து வருகின்றன. அவர்களுக்கு இடம் கொடுக்காமல் நான் தெளிவாக செயல்பட்டு எல்லாம் சகோதரத்துவம் கெடாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

சட்டத்திற்கு எதிராக போராட நினைப்பவர்கள் மத,இன நல்லொழுக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்வது மிகவும் தவறு. அவ்வாறு செய்தால் அது இந்திய நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிராக அமைந்துவிடும் என்று கருதப்படுகிறது.