குறைந்த மதிப்பெண் எடுத்த தோழிக்கு MBBS சீட்! அதிக மதிப்பெண் எடுத்தும் தனக்கு இல்லை! பெரம்பலூர் கீர்த்தனாவின் விபரீத முடிவு!

2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமானது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்தார். தன்னுடைய பணிக்காலத்தை முடிவு செய்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவருடைய மகளின் பெயர் கீர்த்தனா. சென்ற ஆண்டு நடைபெற்ற பள்ளி மேல்நிலை தேர்வில் 1053 மதிப்பெண்கள் பெற்று பாஸ் ஆனார்.

மருத்துவம் படிக்க குறிக்கோளாக இருந்த இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 202 மதிப்பெண்களே எடுத்தார். இதனால் இவரால் மருத்துவம் பயில இயலவில்லை. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தனியார் பயிற்சி மையத்தில் கீர்த்தனா நீட் பயிற்சி மேற்கொண்டார்.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 384 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். நீட் தேர்வில் மீண்டும் தோல்வியுற்றதால் மிகவும் மனம் உடைந்தார். இவரது தோழி மேல்நிலைத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

இது கீர்த்தனாவுக்கு பேரிடியாக அமைந்தது. சில நாட்களாகவே மனவிரக்தியில் காணப்பட்ட கீர்த்தனா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கீர்த்தனா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்ட அவருடைய உறவினர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். இறுதி சடங்கு செய்வதற்காக சுடுகாட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, பெரம்பலூர் காவல் துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.