இதைப்படித்தால் தோல்வி என்ற எண்ணம் மறைந்து தன்னம்பிக்கை கூடும்

தோல்வியைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.


1.   எனக்கு தோல்வி ஏற்பட்டது என்றால், நான் தோல்வியுற்றேன் என்று பொருளல்ல.  நான் வெற்றியை தவற விட்டு விட்டேன் என்று பொருள்.

2.   எனக்கு தோல்வி வந்தது என்றால், நான் ஒன்றும் சாதிக்கவில்லை என்றல்ல, நான் புதிய பாடத்தைக் கற்றுள்ளேன் என்று பொருள்.

3.   எனக்கு தோல்வி ஏற்பட்டது என்றால், நான் அறிவிழந்து விட்டேன் என்றல்ல, சோதிப்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று பொருள்.

4.   எனக்கு தோல்வி வந்தது என்றால், என்னிடம் திறமையே இல்லை என்றல்ல, என் திறமையை புது முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பொருள்.

5.   எனக்கு தோல்வி ஏற்பட்டது என்றால், நான் தாழ்வுற்றேன் என்றல்ல, நான் இன்னும் முழுமை பெறவில்லை என்று பொருள்.

6.   எனக்கு தோல்வி வந்தது என்றால், என் வாழ்க்கையே வீண் என்றல்ல, அது புது வாழ்வைத் துவக்க திருப்புமுனை என்று பொருள்.

7.   எனக்கு தோல்வி ஏற்பட்டது என்றால், நான் முயல்வதில் அர்த்தமில்லை என்றல்ல, நான் மேலும் நன்கு முயற்சிக்க வேண்டும் என்று பொருள்.

8.   எனக்கு தோல்வி வந்தது என்றால், இனி நான் வெற்றி பெற முடியாது என்றல்ல, நான் தொடர்ந்து பயிற்சி பெறவேண்டும் என்று பொருள்.

9.   எனக்கு தோல்வி ஏற்பட்டது என்றால், இறைவன் என்னைக் கைவிட்டுவிட்டான் என்றல்ல, என் எதிர்காலத்தைப் பற்றி இறைவன் வேறு ஏதோ எண்ணம் வைத்திருக்கிறான் என்று பொருள்.