மூத்த குடிமக்களா நீங்கள்? திருப்பதி வெங்கடாசலபதியை ஈசியா தரிசிக்க வழி இருக்குங்க!

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல் இல்லாத நாளே கிடையாது.


இந்நிலையில் வயதில் மூத்தவர்கள் தரிசனம் செய்ய இயலாமல் போவதுண்டு. அதனால் 65 வயதை கடந்த முதியவர்கள் எந்த சிரமும் இல்லாமல் இலவச தரிசனம் செய்ய திருமலை தேவஸ்தான நிர்வாகம் வழி வகை செய்துள்ளது.

ஏற்கனவே திருமலை தேவஸ்தானம் நாள் ஒன்றுக்கு 700 பேர் வீதம் மூத்த குடிமக்களுக்கு இலவச ஸ்பெஷல் தரிசனம் செய்ய நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதற்கு வயது சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கேட்கப்பட்டு இருந்தது. அவருடன் உதவிக்கு செல்ல ஒரு நபருக்கு அனுமதியும் வழங்கப்பட்டு வந்தது.

அவருக்கும் ஆதார் அடையாள அட்டை கோரப்பட்டது. இதன் மூலம் எந்த நெரிசலும் இன்றி பொறுமையாக தரிசனம் செய்ய முடியும். காலை 10 முதல் 3 மணி வரை தரிசனம் செய்ய முடியும். இவர்களுக்கு காலையில் பால் இலவசமாக வழங்கப்படுகிறது. ரூபாய் 70 க்கு 4 லட்டுக்கள் அளிக்கப்படுகிறது.

கோடை விடுமுறை காலத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த சேவையை ரத்து செய்து இருந்தனர். தற்போது மாற்று திறனாளிகள் மற்றும் கை குழந்தைகள் வைத்திருப்போர் எளிதாக தரிசனம் செய்ய மாதா மாதம் இரு தினங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சென்ற இரு வருடங்களாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோல இம்மாதம் செயல்படுத்த உள்ள இலவச ஸ்பெஷல் தரிசனங்களின் நாட்கள் நிர்வாகம் அளித்து வருகின்றது.

வரும் அக்டோபர் 15, 29 ஆகிய இரண்டு தினங்களில் 65 வயதை கடந்த முதியவர்களும், மாற்று திறனாளிகளும் காலை 10 மணி, மதியம் 2 மணி, மாலை 3 மணி என பிரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 4000 பேர் எனவும் ரெண்டு நாட்களுக்கு 8000 பேர் எனவும் திட்டமிட்டு தரிசனம் செய்ய நிர்வாகம் வழி வகை செய்துள்ளது.

மேலும் 16, 30 ஆகிய தினங்களில் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சுபதம் மூலமாக தரிசனம் வழங்க தேவஸ்தான நிர்வாகம் வகை செய்துள்ளது.