பர்ஸ்! பணம்! கிரடிட் கார்டு! டெபிட் கார்டு எதுவும் வேண்டாம்! ஷாப்பிங் செய்ய இனி உங்கள் முகம் போதும்!

வங்கி அட்டை, வாலெட், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை உபயோகிக்காமல் பணத்தை எடுக்கும் முறை சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


உலகெங்கும் டிஜிட்டல் முறைகளில் பணத்தை செலுத்தும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. வங்கி அட்டைகள் அல்லது "பாய்டென் ஆஃப் சேல்" என்ற ஸ்வைப்பிங் கருவியின் மூலம் உபயோகிக்கும்போது கடவு எண்ணை திருடி விட்டு பணத்தை எடுத்து விடுகின்றனர். 

பல்வேறு நிறுவனங்கள் இந்த அசம்பாவிதத்தை கருத்தில் கொண்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு வழிமுறைகளை பல நிறுவனங்கள் முண்டியடித்து கொண்டு கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். 

ஐஃபியூரி என்ற புது வகையான தொழில் நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது சூப்பர் மார்க்கெட்களில் மனிதர்கள் நுழையும் போது இந்த கேமராவானது அவர்களது புகைப்படத்தை இந்த கேமரா எடுத்துவிடுகிறது. பணத்தை செலுத்தும் போது, புகைப்படம் பொருந்தும் போது அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். 

ஏற்கனவே அலிபாபா நிறுவனத்தில் "ஸ்மைல் டூ பே" என்ற முறையில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. கேமராவில் முகத்தை காட்டுவதற்கு 60 மக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளதால், பியூட்டிஃபை என்ற ஆப்பை மூலம் அவர்களின் முகம்  அழகாக தோன்றுவதற்கு சேர்த்துள்ளனர்.

இத்தகைய தொழில்நுட்பங்களை மூலம் பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெறும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கணித்துள்ளனர்.