இதைச் செய்தால் போதும்; உங்களுக்கு கைநிறைய பணம்! பேஸ்புக்கின் அசத்தல் பிளான்!

சென்னை: ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் புதிய திட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளது.


உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. ஃபேஸ்புக் பயன்படுத்தாமல் யாரும் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பலர் ஃபேக் ஐடிகள் தொடங்கி, தவறான செயல்களை செய்வதாக, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் புகார் தெரிவித்து வருகின்றன.

இதன்பேரில், மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த பல போலியான ஃபேஸ்புக் ஐடிகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், ஃபேக் ஐடிகளின் செயலை குறைக்க, ஃபேஸ்புக் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதாவது பயனாளர்களின் அனுமதியை பெற்று, அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகளை ஆய்வு செய்ய முடியும்.

இதனை ஃபேஸ்புக் தீர்மானித்துள்ளது. இப்படி அனுமதி அளிக்கும் பயனாளர்களுக்கு பணம் தரவும் ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதற்காகவே, இந்தியா மற்றும் அமெரிக்க பயனாளர்களிடையே ஸ்டடி (study) என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்யவும் ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.