பேஸ்புக் காதல்! 2வது காதலனிடமும் கற்பை இழந்த தொலைக்காட்சி பெண் ஊழியர்!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்த்து வரும் பெண் ஒருவர் தன்னை காதலித்து கற்பழித்து ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


   சென்னையில் ஈக்காட்டு தாங்கலில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் வேலை பாரத்து வருபவர் அமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு  சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த வேலூர் லத்தேரி அரும்பாக்கத்தை சேர்ந்த மனோஜ்குமார் என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஆன்லைனிலும், செல்போன் மூலமும், வாட்ஸ் ஆப் மூலமும் காதலை வளர்த்துள்ளனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தனது காதலி அமலாவை பார்ப்பதற்காக   சிங்கப்பூரில் இருந்து வந்த மனோஜ்குமார், காதலியை சந்தித்து பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் வேலூர் மட்டும் அல்லாமல் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் பொழுதை கழித்துள்ளனர். இதனை தொடர்ந்து லாட்ஜில் அறை எடுத்து ஒன்றாக தங்கியுள்ளனர். திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என்று மனோஜ்குமாரிடம் அமலா தன்னையே இழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 இதனை தொட்ர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அமலா, மனோஜை வலியுறுத்தியுள்ளார். அப்போது தான் மனோஜ் குமார் தனக்கு ஏற்கனவே திருமணமான தகவலை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமலா, மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் மனோஜ் அதற்கு மறுத்துள்ளார்.  

   இதனை அடுத்து அமலா, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார், ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மனோஜ் மீண்டும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும் தகவல் அமலாவுக்கு கிடைத்துள்ளது. இதனை அடுத்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்துக்கு சென்று தனக்கு நீதி வழங்க கோரியும் தன்னை ஏமாற்றிய காதலன் மனோஜ்குமாரை கைது செய்ய கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

   இது குறித்து மனோஜ்குமாரை பிடித்து விசாரித்த போது  தான் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிந்து தான் அமலா தன்னுடன் பழகியதாக கூறியுள்ளார். மேலும் தன்னிடம் இருந்து நிறைய பணம், பொருட்களை அமலா வாங்கியுள்ளதாகவும், அவருடைய அனுமதியின் பேரில் தான் செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும் கூறி ஆதாரங்களை கொடுத்துள்ளார் மனோஜ். மேலும் அமலாவை திருமணம் செய்ய முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.  இதையடுத்து இருவரும் தனியாக பேசியதை தொடர்ந்து, பிரிந்து செல்வதற்கு அமலா ஒப்புக் கொண்டார்.

    சிலமாதங்களுக்கு முன்னரும் தன்னுடன் பணிபுரியும் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு இளைஞர் மீதும் காதலித்து ஏமாற்றியதாக அமலா புகார் கொடுததிருந்தார். பின்னர் ஏற்பட்ட சமாதானத்தை அடுத்து அந்த புகாரை அமலா வாபஸ் பெற்றார். இது குறித்து விசாரித்த போது, அமலாவுக்கு இதே போல் இளைஞர்களை நம்பி பழகுவதும் பிறகு அவர்களால் ஏமாற்றப்படுவதும் வாடிக்கை என்று கூறுகிறார்கள் அவருடன் பணி புரிபவர்கள்.