அற்புதம் செய்யும் வெந்தயக் கீரை!!

ருசியில் கசப்புத்தன்மையுடன் இருந்தாலும் வெந்தயக் கீரையில் இருக்கும் சத்துக்களும் மருத்துவத்தன்மையும் மிகவும் அதிகம்.


* வெந்தயக் கீரையை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி, வேதனை, ரத்தப்போக்கு குறையும்.

* நீண்ட நாட்களாக சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெந்தயக்கீரை சூப் குடித்தால் விரைவில் நிவாரணம் அடையலாம்.

* உடல் மந்தமாக அல்லது உடல் சோர்வாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் உடலின் செயலாற்றல் அதிகரித்து சுறுசுறுப்பு அடையும்.

* வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். அத்துடன்  நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவரவும் உடல் சூடும் குறையும்.