வெறும் காலுடன் மாம்பழத் தோட்டத்தில் விவசாயம் முதல் இஸ்ரோ தலைவர் வரை! நெகிழ வைக்கும் சிவன் வாழ்க்கை!

K. சிவன் என்றழைக்கப்படும் கைலாசவடிவு சிவன் என்பவர் இந்திய விண்வெளித் துறையின் அறிவியலாளர் ஆவார். 


பிஎஸ்எல்வி திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இவர் கடந்த 33 ஆண்டுகளாக ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு இருந்தது. இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைவராக 2018 -ல் பதவியேற்றார். இந்தியாவின் இஸ்ரோவின் தலைவரான  டாக்டர் கே.சிவனின் வாழ்க்கை கந்தல் துணியிலிருந்து ஆரம்பித்தது என்றால் நம்மால் நம்ப முடியுமா ?

ஆனால் அதுதான் உண்மை இதனைப்பற்றி அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். சிவன் அவர்கள் தன்னுடைய கல்லூரி படிப்பு முடியும் வரை காலில் செருப்பு கூட அணிய இயலாத வறுமையில் இருந்துள்ளார் என்பதை கூறினார். அந்த வறுமை அவருக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் பல பல. 

மிகப்பெரிய வாழ்க்கை போராட்டத்திற்கு பின்புதான் சிவன் தற்போது இஸ்ரோவின் தலைவராக உருவெடுத்துள்ளார். சந்திராயன் 2 பணியில் சிவனின் ஆழ்ந்த ஈடுபாடுதான் கட்டுப்பாட்டு மையத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீரை விடச் செய்தது. விக்ரம் லேண்டர் தரையிரங்கும் போது கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பினை இழந்தது.

இதனால் சிவன் மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தார். இவருக்கு பிரதம மந்திரி மோடி அவர்கள் கட்டியணைத்து ஆறுதல் கூறிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

டாக்டர் கே .சிவன் தன்னுடைய இளமைப்பருவத்தில் கால்சட்டை கூட அணிய முடியாமல் ஏழ்மையில் வாழ்ந்துள்ளார். அவருடைய அப்பாவிற்கு  தினம்தோறும் மாம்பழ தோட்டத்தில் விவசாயத்திற்கு உதவியும் செய்து வந்துள்ளார் தன் கல்லூரியை கூட தேர்ந்தெடுப்பதை விவசாயத்திற்கு தன்னுடைய தந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே கல்லூரியை கூட வீட்டிற்கு அருகிலேயே தேர்ந்தெடுத்திருக்கிறார் டாக்டர் கே. சிவன்.

மெட்ராஸ் இண்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் படிக்கத் தொடங்கியபோதுதான் சிவன் அவர்கள் காலில் செருப்பு அணியவே தொடங்கியுள்ளார். அதற்கு கூட காசு இல்லாமல் எப்போதும் வேஷ்டியை அணிந்துள்ளார் அதனையும் தன்னுடைய புன்னகை கலந்த சிரிப்புடன் நகைத்துக் கொண்டே கூறினார் டாக்டர் கே சிவன்.

எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் 3 வேளை வயிறார உணவு அளித்த தன் பெற்றோருக்கு நன்றி கூறினார் சிவன். பள்ளிப் படிப்பை முடித்த பின் பொறியியல் படிப்பில் சேருவதற்கான பணம் இல்லாததால் முதலில் இளங்கலை கணிதவியல் படிப்பை படித்து முடித்தார். அதற்குப்பின் தன் தந்தையுடைய சொந்த நிலத்தை விற்று அதில் இருந்த பணத்தின் மூலம் பொறியியல் படிப்பை பைல் ஆரம்பித்துள்ளார். பின் ஐ.ஐ.எஸ்சியில் மேல் படிப்புக்கு , சென்றுள்ளார். விக்ரம் சரபாய் மையத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார் . அதற்குப்பின் பி.எஸ்.எல்.வி திட்டத்தில் சேர்ந்துள்ளார் .