மீண்டும் தமிழகத்திற்கு வருவேன்..! சபதம் போடும் ரோகிணி ஐஏஎஸ்..!

சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவந்த ஐஏஎஸ் ரோகினி தற்போது மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு பணியாற்றி வருகிறார்.


சமீபத்தில் ரோகினி ஐஏஎஸ் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ்நாட்டை நான் மிகவும் மிஸ் செய்வதாகவும், தமக்கு மனநிறைவைத் தந்த மாநிலம் தமிழ்நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனது கேரியரை தொடங்கியதே தமிழகத்தில்தான். ஆகையால் தான் தமிழகம் எனக்கு மனநிறைவைத் அந்த மாநிலம் என்று நான் கூறுகிறேன் எனவும் ரோகினி ஐஏஎஸ் தெரிவித்தார்.

இருப்பினும் அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் துறை மாற்றம் ஆகியவை எல்லாம் எதுவும் சாதாரண ஒன்று.‌ ஆகையால் நாம் எங்கு பணிபுரிகிறோமோ முழு அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.மேலும் தொடர்ந்து பேசிய ரோகிணி ஐஏஎஸ் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் ஆட்சியராக நான் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன்.

நான்கு ஆண்டுகள் டெல்லியில் டெபுடேசன் முடிந்தபிறகு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் தமிழகம் வருவேன் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் எனவும் அவர் கூறினார்.