திமுகவின் தூண்களில் ஒருவர்! காலமானார் ஆயிரம் விளக்கு உசேன்!

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான உசைன் இறந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொன்மைக்கால உறுப்பினர்களில் ஒருவர் உசைன். இவர் தன் முதல் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த தேர்தலில் தோற்றுப்போனார். அடுத்த தேர்தலில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றிக்கு பின்னர் "ஆயிரம் விளக்கு உசைன்" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட தலைவர்களுள் இவரும் ஒருவர். முக்கியமாக சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாமல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்தடைவதை சிறப்பாக செய்து வந்தார். அண்ணா கலைஞர் ஸ்டாலின் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் உசைனும் ஒருவர். கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதில் அரும்பாடுபட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றினார்.

வயது மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து சற்று விடுபட்டிருந்தார். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள லாயிட்ஸ் சாலையில் சொந்த வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பின் காரணமாக அவருக்கு உடல்நலம் குன்றியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் பலர் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஆயிரம் விளக்கு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.