தமிழகத்தில் கேன்சர் வந்த பிராய்லர் கோழி விற்பனை! வைரலாகும் வாட்ஸ் ஆப் தகவலின்‌அதிர்ச்சி பின்னணி!

பிராய்லர் கோழிகள் குறித்து வாட்ஸ்அப்பில் வெளியாகி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


சமீபத்தில் பிராய்லர் கோழிகளை பற்றி வாட்ஸ்அப்பில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. வளர்வதற்கு 45 நாட்கள் எடுத்துக்கொள்ளும் பிராய்லர் கோழிகள். ஆனால் ஊசி போட்டு அவற்றை 20 நாட்களிலேயே பண்ணை உரிமையாளர்கள் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பிராய்லர் கோழிகளுக்கு அளிக்கப்படும் உணவு பொருட்களில் வேதயியல் மருந்துகள் கலக்கப்படுவதாகவும், அவை கோழிகளுக்கு ஒப்பு கொள்ளாததால் கேன்சர் முதலிய பல்வேறு விபரீதங்களுக்கு வழிவகுப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் இந்த கேன்சர் நோய் பிற பிராய்லர் கோழிகளையும் தாக்கக்கூடும் என்பதால், மூன்று மாதங்களுக்கு பிராய்லர் கோழிகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்துவது போன்ற செய்தி பரவியது. 

உடுமலை பகுதியில் 8,30,000 நாட்டு கோழிகளை பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிராய்லர் கோழிகள் குறித்த செய்தி அனைத்தும் வதந்திகளே.  கோழிகள் அனைத்தும் முழுமையாக மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன.

இதனால் பிற கோழிகளுக்கு நோய் ஏற்படும் அபாயம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. கோழிகளுக்கு நோய் ஏற்பட்டுள்ளதாக இதுவரையிலும் எந்தவித புகாரும் எழவில்லை" என்று கூறியுள்ளார்.